உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தியாகராஜர் பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் நிதி

தியாகராஜர் பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் நிதி

திருப்பரங்குன்றம் : மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியின் இந்நாள் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக முன்னாள் மாணவர்கள் ரூ.44 லட்சம் நிதி வழங்கினர்.இங்கு 1992- -96ல் படித்த மாணவர்கள் அசோக், செந்தில், சிவக்குமார், பாலமுகன், பரமசிவம் ஆகியோர் கல்லுாரித் தலைவர் ஹரி தியாகராஜனிடம் வழங்கினர். முதல்வர் பழனிநாத தராஜா, முன்னாள் மாணவர்கள் சங்க தொடர்புத் துறை அலுவலர் கார்த்திகேயன் உடனிருந்தனர்.ஹரிதியாகராஜன் கூறியதாவது: முன்னாள் மாணவர்கள் வழங்கிய நிதி வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு, வட்டித் தொகையை கொண்டு கல்லுாரி நிறுவனர் நாளில் பிளஸ் 2 ல் அதிக மதிப்பெண், பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஒழுக்கம், வருகைப் பதிவு, அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. கல்லுாரிக்கு எப்.சி.ஆர்.ஏ., அனுமதி கிடைத்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு வெளிநாட்டில் உள்ள முன்னாள் மாணவர்களும் உதவ வசதியாக இருக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி