தனியார் நிறுவனங்களில் திருக்குறள் அவசியம்
மதுரை: 'அரசு அலுவலகங்களில் திருக்குறளும் - உரையும் எழுதப்படுவது போல தனியார் நிறுவனங்களும் எழுதி காட்சிப்படுத்த வேண்டும்' என மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) கார்த்திகேயன் கேட்டுக் கொண்டார்.அவர் தெரிவித்ததாவது:திருக்குறளை அதன் பொருள் விளக்கத்துடன் அரசு அலுவலகங்களில் எழுதி காட்சிப்படுத்தப்படுகிறது. அதுபோல தனியார் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலை உரிமையாளர்கள் 'தினம் ஒரு திருக்குறள்' என்ற தலைப்பில் பொருள் விளக்கத்துடன் தொழிலாளர்கள் அறியும் வண்ணம் காட்சிப்படுத்த வேண்டும்.இதனை ஊக்கப்படுத்தும் வகையில், தொழில் நல்லுறவு பரிசுக்கான விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும் போது 'திருக்குறளும் - உரையும்' காட்சிப்படுத்திய தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும், என்றார்.