உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  இன்று டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு

 இன்று டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு

மதுரை: டி.என்.பி.எஸ்.சி., சார்பில் இன்று (நவ.16) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான தேர்வு நடக்கிறது. மதுரை மாவட்டம் கிடாரிபட்டி லதா மாதவன் பொறியியல் கல்லுாரி, ஆஸ்டின்பட்டி பி.டி.ஆர்.பொறியியல் கல்லுாரி, நாகமலை புதுக்கோட்டை மதுரை காமராஜ் பல்கலை மையங்களில் 850 பேர் எழுத உள்ளனர். காலை தேர்வு 9:30 - 12:30 மணிவரை, மதியம் தேர்வு 2:30 - 5:30 மணி வரை நடைபெறும். சிறப்பு பஸ்கள், தடையற்ற மின்சாரம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையத்தில் காலை 9:00 மணிக்கு மேல், மதியம் 2: 00 மணிக்கு மேல் தேர்வர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வர்கள் ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ