உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி - மே 31

இன்றைய நிகழ்ச்சி - மே 31

கோயில்வருஷாபிஷேகம்: காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருவள்ளுவர் நகர், மதுரை, பால்குடம், காலை 6:00 மணி, விளக்கு பூஜை, மாலை 6:00 மணி.வைகாசி உற்ஸ அன்னதானம்: வீரகாளியம்மன் கோயில், ஜெய்ஹிந்த்புரம், மதுரை, ஏற்பாடு: ஹிந்து மக்கள் கட்சி, காலை 11:00 மணி.ஜீவ கருணை பிரார்த்தனை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, தலைமை: திருவருட் பிரகாச வள்ளலார், மாலை 5:30 மணி.பக்தி சொற்பொழிவுஸ்ரீராம அவதாரம் - கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - காஞ்சி காமகோடி பீட வித்வான் திருச்சி கல்யாணராமன், தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தொடங்கி வைப்பவர்: கல்லுாரி செயலாளர் ஹரி தியாகராஜன், ஏற்பாடு: கருமுத்து கண்ணன் நினைவு அறக்கட்டளை, அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.லலிதா சகஸ்ரநாமம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.சிவ லீலா: நிகழ்த்துபவர்-தாமோதர தீட்சிதர், சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.நாராயணீயம்: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழ மாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மாலை 6:30 மணி.திருக்குறள்: நிகழ்த்துபவர் - ராமச்சந்திரன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.சத்சங்கம், சிவபுராண பாராயணம், நாமஜபம்: நிகழ்த்துபவர் - சிவானந்த சுந்தரானந்தா, மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி. ஏற்பாடு: தெய்வநெறிக் கழகம், மாலை 6:00 மணி.பொதுஉலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு டோல் ப்ரீ எண் அறிமுக விழா: கலெக்டர் அலுவலகம், மதுரை, பங்கேற்பு: கலெக்டர் சங்கீதா, ஏற்பாடு: அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, காலை 9:00 மணி.மில்லட் விஷன் அண்ட் மிஷன் - சிறுதானிய விழிப்புணர்வு கூட்டம்: மடீட்சியா ஹால், மதுரை, சிறப்பு விருந்தினர்: ஐக்கா நிறுவனம், பயோ என்சைம் ஹோம்கேர், பர்சனல் கேர், ஹேல்த் புட் ப்ராடக்ட்ஸ் நிறுவனர் தேவிபாலா, மாலை 4:30 மணி.சட்ட விழிப்புணர்வு பேரணி வாகனம் துவக்கம்: மாவட்ட நீதிமன்ற வளாகம், மதுரை, தலைமை: முதன்மை மாவட்ட நீதிபதி திலகராஜ், மதியம் 2:30 மணி. இளம் தளிர்களுக்கான திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நிறைவு விழா: கருப்பையா சட்ட அலுவலக வளாகம், பூம்புகார் 2வது தெரு, வளர்நகர் பிரதான சாலை, மதுரை, ஏற்பாடு: ஆயிரம் பவுண்டேஷன், பாரதி டியூசன் சென்டர், தலைமை: ஓய்வுபெற்ற முதன்மை மாவட்ட நீதிபதி பாலசுந்தரகுமார், சிறப்பு விருந்தினர்: பெண்கள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆனந்தவள்ளி, வழக்கறிஞர் தமிழ்மணி, மாலை 5:45 மணி.காந்தியடிகளின் பன்முக ஆளுமை படிப்பிடைப் பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: காந்தியக் கல்வி ஆராய்ச்சி செயளாலர் நந்தாராவ், வாழ்த்துரை: காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், சிறப்புரை: பொருளாளர் செந்தில் குமார், பங்கேற்பு: மதுரைக் கல்லுாரி ஆங்கில துறை முதுகலை மாணவர்கள், காலை 11:00 மணி.கிராம கைத்தொழில் வீட்டு உபயோகப் பொருள் தயாரிப்பு பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, பயிற்றுநர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், காலை 11:00 மணி.எஸ்.டி.பி.ஐ., ஆர்ப்பாட்டம்: நெல்பேட்டை அண்ணாதுரை சிலை அருகில், மதுரை, தலைமை: தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், பேசுபவர்கள்: முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் பிஸ்மில்லா கான், எஸ்.டி.பி.ஐ., வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன், மதியம் 2:00 மணி.கண்காட்சிஅரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை