கோயில்திருபவித்திர உற்ஸவம்: சுந்தரராஜ பெருமாள் கோயில், அழகர்கோவில், உற்ஸவர் புறப்பாடாகி ஆரிய வாசல் பிரகாரம் சுற்றி வந்து சுந்தரபாண்டியன் மண்டபத்திலுள்ள ஆமைதாங்கி மண்டபத்தில் எழுந்தருளல், சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.திருபவித்திர உற்ஸவம்: ஸ்ரீநிவாச பெருமாள் தேவஸ்தானம், மீனாட்சிபுரம் 2வது தெரு, மதுரை, பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா, காலை 6:00 மணி, அலங்கார தாமரை தடாகத்தில் தீர்த்தவாரி, காலை 9:00 மணி, கடம் புறப்பாடு, திருவாராதனம் சாற்றுதல், மதியம் 12:00 மணி.69ம் ஆண்டு குருபூஜை விழா: அருணகிரி சுவாமிகள் கோயில், அயன் பாப்பாக்குடி, அவனியாபுரம், மதுரை, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் திருப்பொன் சுண்ணம் பதிகம் பாடி சுண்ணம் இடித்தல் நிகழ்ச்சி, மாலை 6:00 மணி.பவுர்ணமி வழிபாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 6:15 மணி.அவிட்டத்தின் அவதாரம்: காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மாதாந்திர நட்சத்திர விழா, விக்ரகத்திற்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சொற்பொழிவு, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மாலை 6:30 மணி.பக்தி சொற்பொழிவுதிருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.சுவாமி நிரஞ்ஜனானந்தர் ஜெயந்தி சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - சுவாமி அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.சதஸ்லோகி சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.பொதுதிரிவேணி விழா - சிவானந்த ஜெயந்தி, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான பொருளுடன் குறள் ஒப்புவித்தல் போட்டி : தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: தெய்வநெறிக் கழகம், மாலை 5:00 மணி.கால்கோள் விழா: வேலம்மாள் காம்பவுண்ட், விவசாயக்கல்லுாரி எதிரில், ஒத்தக்கடை, செப். 6ல் அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு பூமி பூஜை, காலை 9:00 மணி.அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்குதல்: சுப்பிரமணியபுரம் பாலம் அருகே, மதுரை, பங்கேற்பு: நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, மாலை 6:00 மணி.வைகை ஆற்றில் பவுர்ணமி தீபாராதனை: பேச்சியம்மன் படித்துறை, மதுரை, ஏற்பாடு: வைகை நதி மக்கள் இயக்கம், மாலை 5:30 மணி.ஜெமினி சர்க்கஸ்: யு.சி. பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி. ஆவணி அவிட்டம் பூணுால் மாற்றும் விழாவி.எம்., கல்யாண மகால், புது மாகாளிப்பட்டி ரோடு, மதுரை, தலைமை: நிறுவனர் ராஜ்குமார், ஏற்பாடு: தமிழக சவுராஷ்டிரா முன்னேற்ற பேரவை, காலை 7:00 முதல் 10:00 மணி வரை.பச்சரிசிக்காரர் திருமண மண்டபம், தெற்குமாசி வீதி, மதுரை, விஸ்வகர்ம காயத்ரி ஹோமம், காலை 5:00 மணி, பூணுால் அணிதல், ஏற்பாடு: ஆதிசிவலிங்காச்சார்ய குரு சுவாமிகள் ஆதீன வேதபாடசாலை, காலை 7:00 முதல் மதியம் 12:30 மணி வரை.ஆனந்தேஸ்வர விநாயகர் ஆஸ்திக சபா, யமுனா ரோடு, எல்லீஸ் நகர், மதுரை, காலை 8:00 மணி. யோகா, தியானம்:கர்ப்பிணிகளுக்கு இலவச யோகா பயிற்சி: தாஜ் மருத்துவமனை, கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் 11:00 மணி வரை.