உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அவனியாபுரத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்

அவனியாபுரத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்

மதுரை : மதுரையில் இன்று (ஜன. 15) நடக்க உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அடுத்து போக்குவரத்தில்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மதுரை நகரில் இருந்து அவனியாபுரம் செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை. இந்த வாகனங்கள் வில்லாபுரம், பெரியார் சிலை, அவனியாபுரம் பைபாஸ், வெள்ளைக்கல், விமான நிலையம், முத்துப்பட்டி வழியாக திருப்பரங்குன்றம் செல்ல வேண்டும்.திருப்பரங்குன்றத்தில் இருந்து அவனியாபுரம் செல்ல வாகனங்களுக்கு அனுமதியில்லை. இந்த வாகனங்கள் அனைத்தும் முத்துப்பட்டி, கல்குளம், வெள்ளைக்கல் வழியாக மதுரை நகர் அல்லது பெருங்குடி செல்ல வேண்டும்.ஹர்சிதா மருத்துவமனை மருதுபாண்டியர் சிலை சந்திப்பில் இருந்து அவனியாபுரம் செல்ல வேண்டிய வாகனங்கள் அவனியாபுரம் பைபாஸ், பெரியார் சிலை வழியாக செல்ல வேண்டும். ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள் முத்துப்பட்டி சந்திப்பு வழியாக முல்லை நகர், அவனியாபுரம் போலீஸ் ஸ்டேஷன் வழியாக வாடிவாசல் செல்ல வேண்டும்.காளைகள் ஏற்றி வந்த வாகனங்கள் மற்றும் பார்வையாளர்கள் வாகனங்கள் கே 4 உணவகம், டி மார்ட், பெரியார் நகர் ரோடு, வெள்ளைக்கல் கிளாட்வே கிரவுண்ட் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.ஜல்லிக்கட்டு முடிந்த பின் உரிமையாளர்கள் காளைகளை அவனியாபுரம் பைபாஸ் - செம்பூரணி ரோடு சந்திப்பு வந்து தங்கள் வாகனங்களில் காளைகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என நகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை