உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்பொறியாளர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் குறித்த பயிற்சி

மின்பொறியாளர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் குறித்த பயிற்சி

மதுரை: தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர்களுக்கு மதுரை தொழில்நுட்பட பயிற்சி மையத்தில் மூன்று நாட்கள் ஸமார்ட் மீட்டர் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.தமிழக மின்சார வாரியத்தில் வருங்காலத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் 1.5 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு, முன்னோட்டம் பார்த்து வருகின்றனர். இதன் வெற்றியை பொருத்து மாநில அளவில் அடுத்த கட்ட நகரங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.இதுகுறித்து மின்சார வாரிய பொறியாளர்களுக்கு 3 நாள் பயிற்சி மதுரையில் நடந்தது. மின்வாரிய பொதுமேலாளர் (மனிதவளத்துறை) சந்திரசேகரன் துவக்கி வைத்தார். நெய்வேலி தேசிய மின்பயிற்சி நிறுவன முதல்வர் இயக்குனர் செல்வம் முன்னிலை வகித்தார். துணைப் பொதுமேலாளர் ஷப்னம் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் ஏற்பாடுகளை செய்திருந்தார். முகாமில் ஸ்மார்ட் மீட்டர் இயக்கம், அதனை பயன்படுத்தும், கையாளும் விதம், அதன் சிறப்புகள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்