உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இட நெருக்கடியால் தவிக்கும் ரயில்வே பயணிகளுக்கு  அவதியோ அவதி n மதுரை ஸ்டேஷனில் பிளாட்பாரம் பற்றாக்குறையால்

இட நெருக்கடியால் தவிக்கும் ரயில்வே பயணிகளுக்கு  அவதியோ அவதி n மதுரை ஸ்டேஷனில் பிளாட்பாரம் பற்றாக்குறையால்

மதுரை மதுரை ரயில்வே ஸ்டேஷனில் சீரமைப்பு பணிகள் நடக்கும் நிலையில், பிளாட்பாரம் பற்றாக்குறை காரணமாக காலை, இரவு உள்ளிட்ட துரித நேரங்களில் பயணிகள் இடநெருக்கடியால் அவதிக்குள்ளாகின்றனர். ஸ்டேஷனில் தற்போது 7 பிளாட்பாரங்கள் உள்ளன. சீரமைப்பு பணி நடப்பதால் முதல் 5 பிளாட்பாரங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில் தினமும் காலையில் 6:45 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ், 6:50 மணிக்கு ராமேஸ்வரம் பாசஞ்சர், 7:05 மணிக்கு கோவை 'இன்டர்சிட்டி', 7:25 மணிக்கு செங்கோட்டை பாசஞ்சர் என மதுரையில் இருந்து வரிசையாக ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து மதுரைக்கு அதிகாலை 5:30 மணிக்கு வரும் பாண்டியன் ரயிலை பல நாட்களில் 'பிட் லைன்' கொண்டு செல்லாமல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, முதல் பிளாட் பாரத்திலேயே நிறுத்தி வைக்கின்றனர். இதேபோல் அதிகாலை 3:35 மணிக்கு மதுரை வரும் புனலுார் ரயிலும் பிளாட்பாரத்திலேயே நிறுத்தி வைக்கப்படுகிறது. முண்டியடிக்கும் பயணிகள் இதனால் பிளாட்பாரம் பற்றாக்குறை ஏற்படுவதுடன், ஒரே பிளாட் பாரத்தில் இரண்டு ரயில்களை நிறுத்தி இயக்கும் சூழல் உருவாகிறது. அச்சமயங்களில் முறையான அறிவிப்பு இன்மையால் காலை வேளையில் அவசரகதியில் வரும் பயணிகள் ரயில் மாறி ஏறிவிடுகின்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. காலி பாசஞ்சர் பெட்டிகளை ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் பிளாட்பாரங்களில் கொண்டு வந்து நிறுத்துவதால் கடைசி நேரத்தில் முண்டியடித்து ரயிலில் ஏறும் நிலைக்கு பயணிகள் ஆளாகின்றனர். சிலசமயங்களில் கடைசியில் உள்ள சரக்கு பெட்டியில் ஏறி பயணிக்கும் நிலையும் உள்ளது. இதுகுறித்து ரயில்வே அலுவலர்கள் கூறுகையில், 'இந்நிலைமை தற்காலிகமானதுதான். சீரமைப்புப் பணிகள் முடிந்ததும் நெரிசலும் தீர்ந்துவிடும்' என்றனர். என்னதான் தீர்வு சமூக ஆர்வலர் குமரவேலு கூறியதாவது: மதியம் 12:00 மணிக்கு மதுரை வரும் தேஜஸ் ரயில், மதியம் 3:30 மணி வரை முதல் பிளாட்பாரத்திலேயே நிறுத்தி வைக்கப்படுகிறது. அதிகாலையில் மதுரை வரும் பாண்டியன், புனலுார் ரயில் பெட்டிகளையும் பிளாட்பாரத்திலேயே நிறுத்தி வைப்பதால் காலையில் வரிசையாக செல்லும் ரயில்களை இயக்குவதற்கு போதிய பிளாட்பாரங்கள் கிடைப்பதில்லை. இதற்கு தீர்வாக, சென்னையில் இருந்து வரும் ரயில்களை நிறுத்த, மதுரையில் இருந்து வடக்கு மார்க்கமாக செல்லும் ரயில்களை இயக்க, முதல் பிளாட்பாரத்தில் பார்சல் அலுவலகம் அருகேயுள்ள 'குட்ஸ் ஷெட்'டில் உள்ள காலியிடத்தில் '1ஏ' என புதிய பிளாட்பாரம் அமைக்கலாம். கூடல்நகரில் கூடுதலாக பிட் லைன் அமைக்கலாம். இதன்மூலம் இடநெருக்கடி குறையும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை