உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  விதிமீறும் குவாரிகள் உதயகுமார் கோரிக்கை

 விதிமீறும் குவாரிகள் உதயகுமார் கோரிக்கை

திருமங்கலம்: திருமங்கலம், கள்ளிக்குடி தாலுகா பகுதிகளில் விதிமீறி செயல்படும் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்.டி.ஓ., சிவஜோதியிடம் சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் மனு அளித்தார். அவர் கூறியதாவது: திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி பகுதிகளில் குவாரிகள் விதிமீறி செயல்படுகின்றன. இதனால் விவசாயம் பாதித்து நீர்மட்டம் 300 அடிக்கும் கீழ் சென்று விட்டது. விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வீடுகளும் சேதமடைகின்றன என்றார். மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வம், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் துரைப்பாண்டி, ஒன்றிய செயலாளர் கண்ணன், பிரபு சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி