| ADDED : பிப் 13, 2024 04:53 AM
மதுரை : மதுரை நகர் பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்கள் பிப்.,19 முதல் 23 வரை நடக்கிறது.மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுப்பு பணி கடந்த டிசம்பர் முதல் துவங்கி நடக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு ஆவணங்களை தவிர்த்து, ஒரே ஆவணத்தில் அனைத்து உதவிகளையும் பெற ஏதுவாக தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.இதுவரை பதியாத மாற்றுத்திறனாளிகள் விடுபடாமல் பயனடைய வசதியாக பிப்.,19 முதல் 23 வரை மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகங்களில் காலை 10:00 மணி முதல் நடக்க உள்ளது. இதில் பங்கேற்போர் தேசிய அடையாள அட்டை அசல், நகல், ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 1 ஆகியவற்றுடன் வரவேண்டும்.முகாம்கள், பிப்.,19ல் வார்டு 1 - 20 வரை, பிப்.20ல் வார்டு 21 - 40, பிப்.,21ல் வார்டு 41 - 60 வரை, பிப்.,22 ல் வார்டு 61 - 80 வரை, பிப்.,23ல் வார்டு 81 - 100 வரை முகாம் நடைபெறும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.