உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்

 குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய்க்கு வைகை அணை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கண்மாயில் இருந்து அவனியாபுரம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பசுமலை நிலா நகர் பகுதியில் வரத்து கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு அப்பகுதி குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்து வீணாகிறது. நான்கு நாட்களாக தண்ணீர் சூழ்ந்து நிற்கும் நிலையில் விஷப் பூச்சிகள் வீடுகளுக்குள் வருவதாகவும், கால்வாயை சீரமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பானாங்குளத்தில் பாயுது மறுகால் வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர், நிலையூர் கால்வாய் வழியாக சென்று இக் கண்மாயை நிரப்பும். இக்கண்மாய் தண்ணீர் மூலம் 150க்கும் கூடுதலான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சமீபத்தில் வைகை அணையில் இருந்து திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பானாங்குளம் கண்மாய் நிரம்பி நேற்று மறுகால் பாய்ந்தது. மறுகால் தண்ணீர் நிலையூர் பெரிய கண்மாய்க்கு செல்கிறது. பானாங்குளம் கண்மாய் பாசன விவசாயிகள் நெல் நடவுக்கான பணிகளை துவக்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ