உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புதிய ரோடு, போதுமான விளக்குகள் நவீன கேமரா வசதிகள் கிடைக்குமா ஐயப்பாட்டில் மெய்யப்பன் தெரு மக்கள்

புதிய ரோடு, போதுமான விளக்குகள் நவீன கேமரா வசதிகள் கிடைக்குமா ஐயப்பாட்டில் மெய்யப்பன் தெரு மக்கள்

மதுரை: மதுரை 58 வது வார்டு ஞானஒளிவுபுரம், மெய்யப்பன் தெரு பகுதியில் ரோடு அமைக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் போக்குவரத்து சிரமம் உள்ளது. அடிக்கடி பாதாள சாக்கடை அடைப்பு ஏற்படுவதால் கழிவுநீர் தேங்கி சுகாதாரமும் கேள்விக்குறியாக உள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர். ரோடு எங்கே மெய்யப்பன் 3வது தெரு மகேந்திரன் கூறியதாவது: பெத்தானியாபுரம் பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் மெய்யப்பன் 3வது தெருவை பயன்படுத்தி ஆரப்பாளையம், பொன்னகரம் உட்பட பல பகுதிகளுக்கும் செல்கின்றனர். இங்கு குண்டும், குழியுமான ரோடாக இருப்பதால் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. இப்பகுதியில் புதிய தார் ரோடு அமைக்க வேண்டும். ரோட்டின் பள்ளங்களில் தேங்கும் நீரால் பள்ளி செல்லும் மாணவர்கள் சுகாதாரக் கேடுக்கு ஆளாகின்றனர். மழை நேரம் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது. 30 ஆண்டுகளுக்கு முன் அமைத்த பாதாள சாக்கடை என்பதால் மேன்ேஹால் பகுதியில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. தெருநாய்கள் தொல்லை தமிழ்ச்செல்வி கூறியதாவது: தெருநாய்கள் கூட்டம் தனியாக செல்வோரை குறிவைத்து தாக்குகின்றன. தெருநாய்கள் தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். பெரும்பாலான தெருவிளக்குகள் செயல்படுவதில்லை. போதுமான வெளிச்சமும் தராமல் மினுங்குகின்றன. மின் ஒயர்கள் தாழ்வாக செல்கின்றன. இப்பகுதியில் நுாலகம் இல்லாததால் மாணவர்கள் சிம்மக்கல் செல்ல வேண்டியுள்ளது. புதிதாக நுாலகம், பூங்கா அமைக்க வேண்டும். தி.மு.க., கவுன்சிலர் ஜெயராம் இவ்வார்டில் மட்டுமே ரூ.11.60 கோடி நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இங்கு மட்டுமே தலா ரூ.5 லட்சம் மதிப்பில் 4 போர்வெல்கள் அமைக்கப்பட்டுள்ளன. விசுவாசபுரி சர்ச் அருகே ரூ.12 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை துவக்கப்பட்டது. மெய்யப்பன் பகுதியில் உள்ள பழமையான வீடுகள் தாழ்வான பகுதியில் இருப்பதால் நீர் எளிதில் தேங்குகிறது. பாதாள சாக்கடை அடைப்புக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மெய்யப்பன் 3 வது தெரு உள்ளிட்ட 8 ரோடுகளுக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஐந்து தெருக்களில் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. மினி காலனியில் ரூ.25 லட்சம், மேலப்பொன்னகரம் 2 வது தெருவில் ரூ.9 லட்சம், கோமஸ்பாளையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலும் சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. விசுவாசபுரி 2வது தெரு, மேலப்பொன்னகரம் 7வது, 2வது மெயின் தெருக்களில் புதிதாக ரேஷன் கடைகள் துவக்கப்பட்டுள்ளன.ரூ.2.60 கோடி மதிப்பில் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிப்பு பணிகள் நடக்கிறது. சமூக விரோத செயலில் ஈடுபடுவோர் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கிறோம். விசுவாசபுரி, மேலப்பொன்னகரம் ஹவுசிங் போர்டு பகுதிகளில் சி.சி.டி.வி., கேமரா அமைக்கப்பட்டுள்ளன. எங்கள் வார்டில் புதிய நீரேற்று நிலையம் அமைக்க கமிஷனரிடம் மனு அளிப்பேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை