பணி முடிந்து 2 ஆண்டாக காத்திருப்பு கழிவுநீருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருமா?
பணி முடிந்து 2 ஆண்டாக காத்திருப்புகழிவுநீருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருமா?ஈரோடு, டிச. ௧-ஈரோடு மாநகராட்சி, 13வது வார்டுக்குட்பட்ட மல்லிநகரில், 70 லட்சம் ரூபாய் மதிப்பில், கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலான நிலையில், பயன்பாட்டுக்கு கொண்டு வர, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக மாநகராட்சி நிதி வீணாவதோடு, வீரப்பன்சத்திரம், அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதி கழிவுநீரை சுத்திகரிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் உந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, கழிவுநீர் உந்து நிலையத்துக்கு, மின் இணைப்பு வழங்க, மின் வாரியம் தாமதப்படுத்தி வருவதே காரணம் என்பது தெரிந்தது. அதேசமயம் மாநகராட்சி தரப்பில் உரிய சான்றிதழ் இணைக்கப்படவில்லையா அல்லது வேறு காரணமா என்பது தெரியவில்லை.