உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தண்ணீர்தொட்டி சீரமைக்கப்படுமா

 தண்ணீர்தொட்டி சீரமைக்கப்படுமா

சோழவந்தான்: சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரம் திடீர்நகரில் பராமரிப்பற்ற தண்ணீர் தொட்டியை சீரமைக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். முருகன்: ஊராட்சி சார்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. குடிநீரை தவிர்த்து சுகாதாரம், கால்நடைகளின் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக தொட்டி பயன்படுத்தப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக பராமரிப்பின்றி செயல்படாமல் உள்ளது. மின் போர்டுகள் சேதமடைந்தும், தொட்டி உடையும் நிலையிலும் உள்ளது. இதனால் நீண்ட தொலைவு சென்று தண்ணீர் கொண்டு வரும் நிலை உள்ளது. ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தண்ணீர் தொட்டியை சரி செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ