உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  த.வெ.க.,வினர் வழிபாடு

 த.வெ.க.,வினர் வழிபாடு

மதுரை: மதுரையில் த.வெ.க., சார்பில் அக்கட்சி தலைவர் விஜயின் மக்கள் பயணம் பாதுகாப்பாகவும், தடையின்றியும் தொடர வேண்டும் என வடக்கு மாவட்ட அலுவலகத்தில் சிறப்பு வழிபாடு, யாகம் நடந்தது. கரூர் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தையடுத்து அதுதொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடக்கிறது. இந்நிலையில் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் அடுத்தடுத்த மக்கள் பயணத்தை விஜய் தொடர முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து அவரது பயணம் தடையின்றி தொடர வேண்டும் என மதுரையில் அக்கட்சி மாவட்ட செயலாளர் கல்லாணை தலைமையில் இந்த வழிபாடு நடந்தது. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை