உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நவீன எரிவாயு மயானத்தில் உடலை வைத்து ஷட்டரை மூட முடியல

 நவீன எரிவாயு மயானத்தில் உடலை வைத்து ஷட்டரை மூட முடியல

வாடிப்பட்டி: வாடிப்பட்டி பேரூராட்சியில் ரூ. 1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட எரிவாயு தகன 'ஷட்டர்' பழுதானது. இங்குள்ள நீரேத்தான் மயானத்தில் 2023ல் இதற்கான கட்டுமான பணிகள் முடிந்தும் நகர்புற துறை அனுமதி, நிர்வகிக்க தனியார் அமைப்புகள் கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் பல மாதங்களாக பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் மயானம் பயன்பாட்டிற்கு வந்தது. மின் மயானத்தின் உட்புறம் உடலை எரிக்கும் போது ஏற்படும் வெப்பத்தின் அளவு உள்ளிட்ட பரிசோதனை, தர கட்டுப்பாட்டு ஆய்வு பணிகள் நடந்ததாக தெரியவில்லை. உடலை வைத்து 'ஷட்டரை' மூட முடியவில்லை. இதனால் எரியூட்டும் போது ஏற்படும் புகை அதற்கான குழாயில் செல்லாமல் கட்டடத்தின் நான்கு பகுதி ஓட்டைகளில் வெளியேறுகிறது. மேலும் உடல் எரிந்த பின் சாம்பலை சேகரிக்கும் பகுதி மேல் புற கட்டடம் விரிசல் விட்டு கற்கள் பெயர்ந்துள்ளன. கட்டட வெளிபகுதியிலும் விரிசல், வெடிப்புகள் உள்ளன. மயானத்தை ஆய்வு செய்து பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ