மேலும் செய்திகள்
தகராறில் கீழே விழுந்த தொழிலாளி சாவு
26-Jul-2026
காதலர்கள் தற்கொலை; கலெக்டர் ஆபீஸ் முற்றுகை
15-Jul-2026
மயிலாடுதுறையில் 50 கிலோ கஞ்சா பறிமுதல்
08-Jul-2026
மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே மாற்றுத்திறனாளி வாலிபரை வெட்டிக் கொலை செய்த வழக்கில், ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி அருகே உள்ள நடராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் ராஜேஷ்.26; மாற்றுத்திறனாளி. வி.சி.கட்சியை சேர்ந்த இவர் நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை பிரதான சாலையில் டூ-வீலரில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்து வந்த மணல்மேடு போலீசார் ராஜேஷின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மயிலாடுதுறை எஸ்.பி., மீனா சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினார்.ராஜேஷ் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது பெற்றோர், உறவினர் மற்றும் வி.சி.கட்சியினர் திரண்டு வந்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி நடராஜபுரம், புத்துார், மயிலாடுதுறை பகுதியில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ராஜேஷ் கொலை வழக்கு தொடர்பாக நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரஞ்சித், 30, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முன் விரோதத்தால் இக்கொலை நடந்தது தெரிய வந்தது.
26-Jul-2026
15-Jul-2026
08-Jul-2026