மேலும் செய்திகள்
ரேஷன் கடை கூரை இடிந்து ஊழியர் படுகாயம்
23-Sep-2025
நீர் வளத்துறை தலைமை பொறியாளர் மயிலாடுதுறை காவிரியில் ஆய்வு
22-Sep-2025 | 1
அண்ணன் மனைவியரிடம் தொடர்பு கொழுந்தன் வெட்டிக்கொலை
21-Sep-2025 | 3
மயிலாடுதுறை:வி.சி.க., தலைவர் திருமாவளவனுக்கு விதிக்கப்பட்ட பிடிவாரன்ட் நிபந்தனையின் பேரில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் கடந்த 2003ம் ஆண்டு வி.சி., தலைவர் திருமாவளவன் தலைமையில் நடந்த மதமாற்ற தடைச் சட்ட கண்டன பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு கடந்த 31ம் தேதி மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வி.சி.க., தலைவர் திருமாவளவன் ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி விஜயகுமாரி, வழக்கை வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.இந்நிலையில், கடந்த 31ம் தேதி திருமாவளவன் எம்.பி., பார்லிமென்ட் கூட்டத்தில் தொடரில் பங்கேற்றதால், வழக்கில் ஆஜராக முடியவில்லை. அதனால், பிடிவாரன்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டி வி.சி.க., வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர்.அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி விஜயகுமாரி, வரும் 27ம் தேதி வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிடிவாரன்ட் உத்தரவை ரத்து செய்தார்.
23-Sep-2025
22-Sep-2025 | 1
21-Sep-2025 | 3