மேலும் செய்திகள்
போக்சோவில் கைதான போலீஸ்காரர் டிஸ்மிஸ்
20-Nov-2025
வி.ஏ.ஓ., கொலையில் 2 திருநங்கையர் கைது
10-Nov-2025
நாகப்பட்டினம்,:நாகையில், ஆர்ப்பாட்டம் நடத்திய காங்., கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.காங்., தலைவர் செல்வபெருந்ததையை மாஜி ரவுடி என விமர்சித்த பா.ஜ., தலைவர் அண்ணாமலையை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த நாகை மாவட்ட காங்., கட்சியினர் நேற்று முன்தினம் மாலை நாகூர் பஸ் நிலையம் அருகில் ஆட்டு கிடா தலை புகைப்படத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டுக்குட்டி உருவப் பொம்மையை எரிக்க முயன்றனர். அதனை போலீசார் துடக்கவே இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து காங்., கட்சியினர் சாலை மறியலில் ஈடுட்டனர்.போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்று, காங்., கட்சியினர் போராட்டத்தை விலக்கி கொண்டனர்.
20-Nov-2025
10-Nov-2025