உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / நாகை புதிய மருத்துவமனையில் தண்ணீரின்றி நோயாளிகள் அவதி

நாகை புதிய மருத்துவமனையில் தண்ணீரின்றி நோயாளிகள் அவதி

நாகப்பட்டினம்:நாகையில் இருந்து 12 கி.மீ.,யில், ஒரத்துாரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, மார்ச், 4ம் தேதி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. பின், அரசு தலைமை மருத்துவமனை முழுவதுமாக, புதிய மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டது.மருத்துவமனையின் அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் நாள்தோறும், 5 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், வெளியில் இருந்து 1.50 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே லாரிகள் வாயிலாக வினியோகம் செய்யப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் சிகிச்சை பெறும் நோயாளிகள், உடனிருப்பவர்கள், நோயாளிகளை பார்க்க வருவோர் சிகிச்சை பிரிவில் கழிவறை, குளியலறையை பயன்படுத்த மருத்துவ ஊழியர்கள் தடை போட்டுள்ளனர். மருத்துவ ஊழியர்கள் கூறுகையில், 'தண்ணீர் பற்றாக்குறையால், உணவு தயாரிக்கும் இடத்தில் பாத்திரங்கள் கழுவுவது, நோயாளிகள் பயன்படுத்தும் துணிகளை துவைப்பது சிரமமாக உள்ளது. மருத்துவமனை டீன் செந்தில் நாதனிடம் கூறினால், இது அரசு பிரச்னை, நம் பிரச்னை இல்லை என்கிறார்' என கூறினர்.இது குறித்து, டீன் செந்தில்நாதனை தொடர்பு கொண்டபோது, ''மீட்டிங்கில் இருக்கிறேன்,'' என தொடர்பை துண்டித்து விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை