உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / சவுதிவில் கொத்தடிமையாக உள்ள மீனவர்களை மீட்க வேண்டி மனு

சவுதிவில் கொத்தடிமையாக உள்ள மீனவர்களை மீட்க வேண்டி மனு

நாகப்பட்டினம்:சவுதியில் கொத்தடிமையாக உள்ள மீனவர்களை மீட்க வேண்டி, நாகை கலெக்டரிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர்.நாகை, சாமந்தான்பேட்டையை சேர்ந்தவர் விஜயகுமார்,50; மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சாவடிகுப்பத்தை சேர்ந்த அஞ்சப்பன்,63; தம்பிராஜா,40; செந்தில்,40; ஆகியோர் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி, சீர்காழியை சேர்ந்த ஒருவர் மூலமாக மீன்பிடி தொழிலுக்காக சவுதி அரேபியாவிற்கு சென்றனர்,அங்கு கடந்தாண்டு டிச.12ம் தேதி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த அஞ்சப்பன் இறந்தார். விசாரணைக்காக மற்ற மூவரையும், அந்நாட்டு போலீசார் அழைத்து சென்றனர். விசாரணையில், அஞ்சப்பன் இயற்கை மரணம் என்பதை உறுதி செய்ததால், மூவரும் தினக்கூலியாக வேலை செய்ய அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது.இவர்களை அழைத்து சென்ற ஏஜென்ட் யூசூப் காலில், ஊதியம் மற்றும் உணவு கொடுக்காமல், மூவரையும் கொத்தடிமையாக வைத்து துன்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.அதனால், மூவரும் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டி விஜயகுமார் குடும்பத்தினர் நேற்று நாகை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை