மேலும் செய்திகள்
த.வெ.க.,வினர் மீது நாகை போலீசார் வழக்கு
22-Sep-2025
நாகை மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்
13-Sep-2025
சிவ மந்திரம் பாட150 பேர் இலங்கை பயணம்
05-Sep-2025
நாகப்பட்டினம்:நாகை, அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கவுதமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், கடந்த 29ம் தேதி, 10 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று முன்தினம் மாலை வேளாங்கண்ணியில் இருந்து தென்கிழக்கில், இந்தியா -- இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் பைபர் படகு மிதப்பதை பார்த்தனர். அந்த படகை நெருங்கி பார்த்த போது மயங்கிய நிலையில் ஒருவர் கிடப்பது தெரிந்தது. அவரை மீட்ட நாகை மீனவர்கள், அவருக்கு முதலுதவி மற்றும் உணவு வழங்கி, நேற்று நாகைக்கு அழைத்து வந்து, கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார் விசாரணையில், இலங்கை, திரிகோணமலையை சேர்ந்த அகமது இர்பான், 41, என்பதும், கடந்த 20 நாட்களுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த அஸ்டின் என்பவருடன் பைபர் படகில் மீன் பிடிக்க புறப்பட் போது, படகு பழுதால் இருவரும் கடலில் தத்தளித்துள்ளனர். உணவில்லாமல் அகமது இர்பான் படகில் மயங்கியுள்ளார்.உடனிருந்த அஸ்டின் நிலை என்னவென்று தெரியவில்லை என தெரிவித்தார். போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
22-Sep-2025
13-Sep-2025
05-Sep-2025