உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் /  போக்சோவில் கைதான போலீஸ்காரர் டிஸ்மிஸ்

 போக்சோவில் கைதான போலீஸ்காரர் டிஸ்மிஸ்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், தேமங்கலத்தை சேர்ந்தவர் குணா, 37. திட்டச்சேரி, போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணியாற்றினார். கடந்த 30ம் தேதி, நாகையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றவர், உறவுக்கார 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி, நாகை, குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். குழந்தைகள் நல குழுமத்தினர் அளித்த புகாரின் படி, மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீஸ்காரரை கைது செய்தனர். இதையடுத்து அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். நேற்று எஸ்.பி., செல்வகுமார், போலீஸ்காரர் குணாவை 'டிஸ்மிஸ்' செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை