மேலும் செய்திகள்
காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., கூட்டம்
02-Feb-2025
வரி, குடிநீர் கட்டணம் உடனடியாகசெலுத்த செயல் அலுவலர் அறிவுரைநாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில், 1,000க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. இதில், பெரும்பாலானோர் குடிநீர் கட்டணத்தை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். இந்நிலையில், கூடுதலாக இணைப்பு வழங்க டவுன் பஞ்., நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பாக்கியுள்ள குடிநீர் கட்டணம், வரியினங்களை உடனடியாக செலுத்த டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ஆறுமுகம் அறிவுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆண்டு கணக்கு மார்ச்சுடன் முடிய உள்ளது. அதற்குள், டவுன் பஞ்சாயத்தில் வீட்டு வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்கள் உடனடியாக அதற்கான தொகையை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். நீண்ட மாதங்கள் பாக்கியுள்ள குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும். புதிய குடிநீர் இணைப்புகளுக்கான பணிகள் நடந்து வருவதால், பணம் கட்டாத இணைப்புகள் துண்டிக்கப்படும். மேலும், வரியினங்களை பாக்கி வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
02-Feb-2025