உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ப.வேலுார் பகவதி அம்மனுக்கு 9ம் ஆண்டு கும்பாபிஷேக விழா

ப.வேலுார் பகவதி அம்மனுக்கு 9ம் ஆண்டு கும்பாபிஷேக விழா

ப.வேலுார் பகவதி அம்மனுக்கு 9ம் ஆண்டு கும்பாபிஷேக விழாப.வேலுார் : ப.வேலுார், சுல்தான்பேட்டையில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, விநாயகர், முருகன், பகவதி அம்மன் ஆகிய சுவாமி களுக்கு புதிதாக செய்யப்பட்ட ஐம்பொன் சிலைகளுக்கு ப்ராண பிரதிஷ்டை, 9ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடத்த எட்டுப்பட்டி தர்மகர்த்தாக்கள், ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று மாலை, 6:00 மணிக்கு விநாயகர் பூஜை, மகா சங்கல்பம் தொடர்ந்து கும்ப அலங்காரம், முதற்கால யாக பூஜையுடன் தொடங்கியது. பகவதி அம்மன், விநாயகர், பாலமுருகன் ஆகிய சுவாமிகளுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ