உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பெண் உயிரிழப்பு: கணவரைகைது செய்யக்கோரி மறியல்

பெண் உயிரிழப்பு: கணவரைகைது செய்யக்கோரி மறியல்

பெண் உயிரிழப்பு: கணவரைகைது செய்யக்கோரி மறியல்சேந்தமங்கலம்:சேந்தமங்கலம், காமராஜபுரம் பகுதியை சேர்ந்த கட்டட மேஸ்திரி மணி; இவரது மனைவி ஜீவா, 40; இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இந்நிலையில், மணி அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மனைவி ஜீவாவிற்கும், மணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று ஜீவா துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த போலீசார், ஜீவாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், சேந்தமங்கலம் மயானம் அருகே, ஜீவாவின் உறவினர்கள் மணியை கைது செய்ய வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு சென்ற போலீசார், அவரை கைது செய்வதாக கூறியதையடுத்து, உறவினர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை