நாமக்கல், : 'நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில் சேர்ந்து படிக்க, விண்ணப்பிப்பதற்கு, மூன்று நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது' என, கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் - திருச்சி சாலையில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லுாரி அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவியர் படித்து வருகின்றனர். இக்-கல்லுாரியில், 13 இளநிலை பாடப்பிரிவுகளில், 970 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. நடப்பு 2024-25ம் கல்வியாண்டிற்கான மாணவியர் சேர்க்கை, மே, 29ல் துவங்கியது. முதல் கட்ட பொது கலந்தாய்வு, கடந்த, 10ல் துவங்கி, 14 வரை நடந்தது.கடந்த, 24ல் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் பாடப்பிரி-வுக்கும், நேற்று முன்தினம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரி-வுகளுக்கும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள, 970 இடங்களில், 669 இடங்கள் நிரப்பப்பட்-டுள்ளன. மீதம், 301 இடங்கள் காலியாக உள்ளன. இதுவரை விண்ணப்பிக்காத மாணவியர், இன்று (ஜூலை, 3) துவங்கி, மூன்று நாட்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்-ளது. வரும், 8 காலை, 9:00 மணிக்கு, பொது கலந்தாய்வு மாண-வியர் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.