ராசிபுரம்: ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்வதற்கான நகர்மன்ற தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி, பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பினர், நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்ய, நகராட்-சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சிகள், சங்கங்கள், அமைப்புகள் ஒன்றி-ணைந்து, 'ராசிபுரம் பேருந்து நிலைய மீட்டு கூட்டமைப்பை' தொடங்கினர்.முதல் கட்டமாக கடந்த, 18ல் கடையடைப்பு நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். 23ல், உண்ணாவிரத போராட்டம் நடத்-தப்போவதாக அறிவித்தனர். இதற்கு போலீசார் அனுமதி தர-வில்லை. இதையடுத்து, மக்கள் பேரணியாக சென்று, 'பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்யக்கூடாது' என கோரிக்கை மனு அளித்தனர். மேலும், உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்க கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம், உண்-ணாவிரத போராட்டத்துக்கு அனுமதியளிக்க உத்தரவிட்டதைய-டுத்து, நேற்று காலை, 8:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை புதிய பஸ் ஸ்டாண்ட் எம்.ஜி.ஆர்., சிலை அருகே உண்ணா-விரத போராட்டம் நடத்தினர். இதில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா மற்றும் அ.தி.மு.க., - பா.ஜ., - ம.தி.மு.க., - தே.மு.தி.க., - கம்யூ., - பா.ம.க., - வி.சி., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அமைப்-பினர், சங்கத்தினர் கலந்து கொண்டனர். அப்போது, 'பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற தீர்மானத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்' என்றனர்.