உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொல்லிமலையில் நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் பஸ் வசதி துவக்கம்

கொல்லிமலையில் நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் பஸ் வசதி துவக்கம்

சேந்தமங்கலம் ; கொல்லிமலை யூனியன், பெரப்பன்சோலை மற்றும் பெத்தநாயக்கன்பட்டியில், தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பஸ் வழித்த-டங்கள் நீட்டிப்பு விழா நடந்தது. எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன் கலந்து கொண்-டனர். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நீட்-டிக்கப்பட்ட வழித்தடத்தில் அரசு பஸ் வசதியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.ஏற்கனவே, தம்மம்பட்டி, நாரைக்கிணறு, ராஜபா-ளையம், மெட்டாலா உள்ளிட்ட வழித்தடங்களில் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ், நாரைக்கிணறு, பிலிப்பாக்குட்டை, கப்பலுாத்து உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அப்பகுதிகளுக்கும் நீட்-டிக்கப்பட்டுள்ளது. தம்மம்பட்டியில் இருந்து, காலை, 7:00 மணி முதல், மாலை, 4:40 மணி வரை பஸ் இயக்கும் வகையில் வழித்தடம் நீட்-டிக்கப்பட்டுள்ளது.இதேபோல், தம்மம்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரி-யகோம்பை உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்-கப்பட்டு வந்த பஸ், முள்ளுக்குறிச்சி முதல் பெரப்பன்சோலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை