உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆவணி அவிட்டத்தில் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி

ஆவணி அவிட்டத்தில் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி

மோகனுார்: ஆவணி அவிட்டத்தையொட்டி, ஸ்ராவண பவுர்ணி புன்யகாலத்தில், பூணுால் மாற்றும் விழா, மோகனுார் காவிரி ஆற்றங்கரையில், வாசவி கன்னிகா பரமேஸ்வரி மடத்தில், நேற்று நடந்தது. தமிழ்நாடு திருவள்ளுவர் மக்கள் கூட்டமைப்பு மற்றும் வள்ளுவ அந்தணர் குருகுலம், விழுப்புரம் மாவட்ட வள்ளுவர் குல சங்கம், கள்ளக்குறிச்சி, கடலுார், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்ட வள்ளுவர் குல சங்க உறவுகள் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூட்டமைப்பு மாநில தலைவர் அருண் கோபால் தலைமை வகித்தார்.வி.பி.எஸ்., வேத பாடசாலை நிர்வாகி ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். அதில், வள்ளுவர் அந்தணர்கள், 100க்கும் மேற்பட்டோர் பூணுால் அணிந்து கொண்டனர். கூட்டமைப்பு மாநில செயலாளர் உதயகுமார், பொருளாளர் சேத்தனா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ