உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு மீட்பு

வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு மீட்பு

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி அருகே, முனியப்பன் புதுாரை சேர்ந்தவர் தங்கவேலு, 50; துாய்மைப்பணியாளர். இவர், வேலைக்கு சென்று விட்ட நிலையில், நேற்று மதியம், 3:00 மணிக்கு, 5 அடி நிளமுள்ள நல்ல பாம்பு, வீட்டிற்குள் நுழைந்துள்ளது. இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். அவர்கள், தங்கவேலுக்கு தகவல் தெரிவித்தனர். அவர், ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்-திற்கு சென்ற தீயணைப்பு துறையினர், நல்ல பாம்பை பிடித்து அருகிலுள்ள கெடமலை அடிவார பகுதியில் விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை