உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பள்ளி மாணவர்களுக்கு உடல் சுத்தம் ஆரோக்கியம் குறித்து பயிற்சி முகாம்

பள்ளி மாணவர்களுக்கு உடல் சுத்தம் ஆரோக்கியம் குறித்து பயிற்சி முகாம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் சார்பில், வட்டார வள மையத்திற்கு உட்பட்ட, பிறந்தது முதல், 18 வயது வரை உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கான உடல் சுத்தம் மற்றும் ஆரோக்கியம் குறித்த பயிற்சி முகாம், நாமக்கல் வட்டார வள மையத்தில் நடந்தது.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோமதி தலைமை வகித்து, துவக்கி வைத்தார்.மேற்பார்வையாளர் சசிராணி முன்னிலை வகித்தார். டாக்டர்கள் சண்முகப்பிரியா, சிவா ஆகியோர், முழு உடல் பரிசோதனை செய்வதற்கான பயிற்சிகளை வழங்கினர்.இப்பயிற்சியில், நடப்பு கல்வி ஆண்டில் (2024-25), மாணவர்களின் உடல் ஆரோக்கியம், எடை, உயரம், கண் பரிசோதனை ஆகிய விபரங்களை, 'எமீசில்' பதிவேற்றம் செய்தல், மாற்றுத்திறன் மாணவர்களை கண்டறிதல், வகுப்பறை கற்றல், கற்பித்தல் குறித்து விளக்கப்பட்டது. சிறப்பு பயிற்றுனர்கள் ஸ்டெல்லா அருணா, புனிதா, சீதா, திவ்யபாரதி, மோகன்ராஜ், இயன்முறை மருத்துவர் கவியரசு ஆகியோர் விளக்கினர்.முகாமில், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை