| ADDED : ஜூலை 17, 2024 09:10 AM
நா.பேட்டை : நாமகிரிப்பேட்டை அடுத்த ஆயில்பட்டி பஸ் ஸ்டாப் அருகே வசிப்பவர் போதுமணி, 57. அரசு ஊழியரான இவரது கணவர் பூமாலை, கடந்த, 20 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். தனியாக வசித்து வரும் போதுமணி, தன், 5 ஏக்கர் விவ-சாய நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் தன் வீட்டில் வாயில் ரத்தம் கசிந்தவாறு மர்மமான முறையில் போதுமணி இறந்து கிடந்தார். நீண்ட நேரமாகியும் போதுமணி வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், ஆயில்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வீட்டை திறந்து உள்ளே பார்த்த போது, போதுமணி வாயில் ரத்தம் கசிந்தவாறு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேலும் உதட்டில் பலத்த காயம் இருந்-தது இதனையடுத்து சந்தேகமடைந்த போலீசார், போதுமணி சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், போதுமணி சாவில் சந்தேகம் இருப்பதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து, எஸ்.பி., ராஜேஸ்-கண்ணன் நேற்று போதுமணி வீட்டை ஆய்வு செய்தார். அப்போது, போதுமணி கழுத்தில் எப்-போதும் தங்கசெயின் அணிந்து இருந்ததாகவும், சடலத்தை மீட்கும்போது செயின் இல்லை என்றும் கூறினர். இதையடுத்து வேறு கோணத்தில் விசாரிக்க எஸ்.பி., ஆயில்பட்டி போலீசாருக்கு அறிவுரை வழங்கி சென்றார்.