உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாணவியருக்கு டி.சி., வழங்கிய ஹெச்.எம்.,

மாணவியருக்கு டி.சி., வழங்கிய ஹெச்.எம்.,

ராசிபுரம், ராசிபுரம், சிவானந்தா சாலையில், 10ம் வகுப்பு படித்த மாணவியர், இரண்டு பேர் முறையே, 457 மற்றும் 485 மதிப்பெண் பெற்றனர். இவர்கள் அதே பள்ளியில், 11ம் வகுப்பு கணித பிரிவில் தமிழ் வழியில் சேர்ந்தனர். இந்நிலையில், தமிழ், ஆங்கில வழிக்கல்வி மாணவர்களை ஒன்றாக அமர வைத்து, ஒரே சமயத்தில் பாடம் நடத்தியுள்ளனர். இதனால், தமிழ் வழியில் சேர்ந்த மாணவியர் இருவருக்கும், பாடம் சரியாக புரியவில்லை. இதனால் அருகில் உள்ள அண்ணா சாலை அரசு மேல்நிலை பள்ளியில் மாணவியர் சேர விருப்பப்பட்டனர். ஆனால், சிவானந்தா சாலை தலைமை ஆசிரியர் வருதராஜ், டி.சி., வழங்காமல் தாமதப்படுத்தினார். இதனால், மாணவியரின் படிப்பு பாதிக்கப்படுவதாக, நேற்று நமது நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, நேற்று இரண்டு மாணவியரின் பெற்றோரை அழைத்த தலைமை ஆசிரியர் வருதராஜ், இருவரது டி.சி.,யையும் வழங்கினார். இதனால், ஒரு வாரமாக நடந்து வந்த மாணவியர் பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை