உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாணவர் சேர்க்கையில் அநீதி பா.ம.க., கண்டன ஆர்ப்பாட்டம்

மாணவர் சேர்க்கையில் அநீதி பா.ம.க., கண்டன ஆர்ப்பாட்டம்

ராசிபுரம் : ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில், பா.ம.க., மாணவர் சங்க, மாநில மாணவரணி அமைப்பாளர் பாலு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்-பட்டோர் மாணவர் சேர்க்கையில் இழைக்கப்படும் அநீதிகளை கண்டித்தும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ராஜினாமா செய்ய வேண்டும், கல்லுாரி மாணவர்களை நாய்கள் எனக்கூறிய ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய கோரியும் கோஷம் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, பாலு பேசுகையில், ''தமிழகத்தில் உள்ள, 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில், பி.சி., - எம்.பி.சி., பிரிவில் நிரம்பாத இடங்-களை பட்டியல் இன பிரிவினரை கொண்டு நிரப்ப வேண்டும் என்றும், ஆனால், பட்டியல் இன பிரிவில் நிரம்பாத இடங்களை காலியாக வைக்க வேண்டும் என பிறப்பித்துள்ள புதிய அரசா-ணையை உடனடியா ரத்து செய்ய வேண்டும்,'' என, பேசினார். பா.ம.க., மாவட்ட நிர்வாகி மோகன்ராஜ் உள்பட மாணவர-ணியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ