உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இன்டர்நேஷனல் கராத்தே அரசு பள்ளி சாதனை

இன்டர்நேஷனல் கராத்தே அரசு பள்ளி சாதனை

குமாரபாளையம், தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலையில், இன்டர்நேஷனல் கராத்தே போட்டி நடந்தது. இதில், 2,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதில், குமாரபாளையம் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், 5, 6, 7ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியர், 10 முதல், 15 வயது பிரிவில் நடந்த போட்டிகளில் பங்கேற்றனர். இதில், ஸ்ரீநிஷா, நித்தீஸ் ஆகிய இருவரும், இரண்டாமிடம், சாய்நித்தீஸ், ஹரிஹரசுதன், மித்ரா, தவனீஷ், விகாஸ் ஆகியோர், மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்தனர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 11ம் வகுப்பு படிக்கும் ஜீனு கிருஷ்ணன் மூன்றாமிடம் பிடித்தார். தலைமை ஆசிரியர்கள் ஆடலரசு, பாரதி, ஆசிரிய, ஆசிரியைகள், தற்காப்பு கலை பயிற்சி ஆசிரியர் பன்னீர்செல்வம் உள்பட பலர் சாதனை படைத்த மாணவ, மாணவியரை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை