உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அழகு மாரியம்மன் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்

அழகு மாரியம்மன் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்

நாமக்கல், ஆக. 22-நாமக்கல் - மோகனுார் சாலை, பாரதி நகரில் அழகு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி, நேற்று காலை, மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்த பக்தர்கள், ஐயப்பன் கோவில் இருந்து ஊர்வலமாக சென்று, அழகு மாரியம்மன் கோவிலை அடைந்தனர். மாலை, 5:00 மணிக்கு விநாயகர் பூஜை, முதல்கால யாக சாலை பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது.இன்று காலை, 5:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், காலை, 7:45 மணிக்கு புனித கடம் புறப்பாடு, 8:00 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !