உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 638 மனுக்களில் 21க்கு உடனடி தீர்வு

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 638 மனுக்களில் 21க்கு உடனடி தீர்வு

மல்லசமுத்திரம், ஆக. 7-மல்லசமுத்திரத்தில் நடந்த, 'மக்களுடன் முதல்வர்' சிறப்பு முகாமில், 638 மனுக்கள் பெறப்பட்டன. அதில், 21 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.மல்லசமுத்திரம் தனியார் திருமணமண்டபத்தில், நேற்று, 'மக்களுடன் முதல்வர்' சிறப்பு முகாம் நடந்தது. இதில், மின்வாரியம், ஊராட்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலா ண்மை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் மையம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, பால்வளம், நகர்புறவளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவு, சுகாதாரம், போலீஸ், தொழிலாளர் நலன், மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். 638 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 21 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.தி.மு.க., நகர செயலாளர் திருமலை, மேற்கு மாவட்ட செயலாளர் மதுராசெந்தில், பி.டி.ஓ.,க்கள் சுந்தரம், அருளப்பன், வேளாண் உதவி இயக்குனர் யுவராஜ், மின்வாரிய ஏ.டி., அமுதா, வட்டார மருத்துவ அலுவலர் ஜெகதீஷ், ஊராட்சிமன்ற தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை