உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திருச்செங்கோடு செங்குந்தர் கல்வி நிறுவனங்களில் பட்டமளிப்பு விழா

திருச்செங்கோடு செங்குந்தர் கல்வி நிறுவனங்களில் பட்டமளிப்பு விழா

திருச்செங்கோடு, திருச்செங்கோடு, செங்குந்தர் கல்வி குழும அங்கங்களான செங்குந்தர் இன்ஜி., கல்லுாரியின், 17-வது, செங்குந்தர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங்கின், 11-வது, செங்குந்தர் மருந்தியல் கல்லுாரியின், 2வது பட்டமளிப்பு விழா, செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜான்சன்ஸ் நடராஜன் தலைமையில் நடந்தது. தாளாளரும், செயலாளருமான பாலதண்டபாணி வரவேற்றார். பொருளாளர் தனசேகரன், வேலைவாய்ப்பு பயிற்சி இயக்குனர் அரவிந்த்திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் துணைவேந்தர் நாராயணசாமி, 9 பேருக்கு, 4 கிராம் தங்க பதக்கங்களையும், 334 பேருக்கு பட்டச்சான்றுகளை வழங்கினார். அப்போது அவர், ''மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இல்லாமல் பலருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கும் வகையில் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்,'' என்றார். கல்வி நிறுவனங்கள் சார்பாக தங்க பதக்கம் பெற்றவர்களுக்கு, 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. செங்குந்தர் பொறியியல் கல்லுாரி முதல்வர் சதீஷ்குமார், செங்குந்தர் மருந்தியல் கல்லுாரி முதல்வர் சுரேந்திரகுமார், செங்குந்தர் செவிலியர் கல்லுாரி முதல்வர் நீலாவதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் பேராசிரியர், பெற்றோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை