உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 114 துப்பாக்கிகளை போலீசிடம் ஒப்படைப்பு

114 துப்பாக்கிகளை போலீசிடம் ஒப்படைப்பு

பள்ளிப்பாளையம்;பள்ளிப்பாளையம் சர்க்கிளில் உள்ள பள்ளிப்பாளையம், வெப்படை, மொளசி போலீஸ் ஸ்டேஷன்களில், 114 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டன.லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதை முன்னிட்டு, பலவிதமான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்போர், போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளிப்பாளையம் பகுதியில் உரிமம் பெற்ற, 53 துப்பாக்கிகள் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது.வெப்படை போலீஸ் ஸ்டேஷனில், 7 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மொளசி போலீஸ் ஸ்டேஷனில், 54 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறை முடியும் வரை, தனி நபர்களிடம் இருந்து பெறப்பட்ட துப்பாக்கிகள், சம்மந்தப்பட்டபோலீஸ் ஸ்டேஷன் பாதுகாப்பில் வைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ