உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பைனான்ஸ் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் சுற்றி வளைப்பு

பைனான்ஸ் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் சுற்றி வளைப்பு

ப.வேலுார்: நாமக்கல், ஜேடர்பாளையம் அருகே, கொத்தமங்கலம், அரசம்-பாளையம் காலனியை சேர்ந்தவர் சரவணன், 49. அதே பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார். கடந்த, 14 மதியம் உணவருந்த வீட்டிற்கு சென்றுள்ளார்.மீண்டும் வந்து பார்த்தபோது, பைனான்ஸ் பூட்டை உடைத்து, மேஜை டிராயரில் வைத்திருந்த, 28,300 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து, ஜேடர்பாளையம் போலீசில் புகாரளித்தார்.மர்ம நபர்களை பிடிக்க, ப.வேலுார் டி.எஸ்.பி., சங்கீதா உத்தர-வுப்படி, எஸ்.ஐ.,க்கள் மோகன், முருகேசன், செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், பைனான்சில் பணம் திருடிய, ஈரோடு மாவட்டம், சோலார் பகுதியை சேர்ந்த கண்ணன், 34, கருங்கல்-பாளையத்தை சேர்ந்த அக்கீம், 32, ஆகிய இருவரையும், நேற்று போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி