உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆம்புலன்ஸ் பணிக்கு நாமக்கல்லில் 25 பேர் தேர்வு

ஆம்புலன்ஸ் பணிக்கு நாமக்கல்லில் 25 பேர் தேர்வு

நாமக்கல், ஆம்புலன்ஸ் பணிக்காக, விண்ணப்பித்தோருக்கு நாமக்கல்லில் நேற்று நேர்முகத்தேர்வு நடந்தது. அதில், 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.நாமக்கல், மோகனுார் சாலையில் அமைந்துள்ள பழைய அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் செயல்படும், 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் பணி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகத்தேர்வு நேற்று நடந்தது. 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நேர்காணலை வாகன பராமரிப்பு மேலாளர் மணிராஜ் தலைமையில், சேலம் மாவட்ட மேளாளர் மனோஜ், நாமக்கல் மாவட்ட மேலாளர் சின்னமணி முன்னிலையில் சேலம் மண்டல மேலாளர் அறிவுக்கரசு நடத்தினார்.இதில் ஓட்டுனர்களுக்கான பணிக்கு டிரைவிங் லைசன்ஸ், உயரம், கல்வி சான்று, வாகனம் ஓட்டி பரிசோதித்ததில், 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மருத்துவ உதவியாளர்களுக்கான பணிக்கு, கல்விச்சான்று, முதலுதவி சிகிச்சைக்கான அடிப்படை தேர்வு, எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஓட்டுனர்கள், மருத்துவ உதவியாளர்கள் என, 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, சென்னையில் மீண்டும் பயிற்சி அளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ