உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராகவேந்திரா சுவாமி மடாலயத்தில் 353ம் ஆண்டு ஆராதனை விழா

ராகவேந்திரா சுவாமி மடாலயத்தில் 353ம் ஆண்டு ஆராதனை விழா

மோகனுார், ஆக. 22-மோகனுார் காவிரி கரையில், நஞ்சன்கூடு ஸ்ரீராகவேந்திரர் சுவாமி மடாலயம் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும், சுவாமியின் ஆராதனை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, 353ம் ஆண்டு ஆராதனை விழா, கடந்த, 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 20ல், மன்யு ஷூக்த, ஸ்ரீஷூக்த ேஹாமம், ராகவேந்திரரின் சுந்தரகாண்டம் உபன்யாசம் நடந்தது.நேற்று காலை, 6:00 மணிக்கு, நிர்மால்ய சேவை, வேதகோஷம், 8:00 மணிக்கு, பஞ்சாமிர்த அபிஷேகம், 9:30 மணிக்கு, கனகாபிஷேகம் நடந்தது. 10:30 மணிக்கு, ராமகிருஷ்ணனின் சீதாராம ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம் உபன்யாசமும் நடந்தது. மூலவர் ராகவேந்திரர் சுவாமிக்கு, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். மதியம், 1:00 மணிக்கு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து, மாலை, 5:00 மணிக்கு, பிரகலாதரின் திருவீதி உலா, தொட்டில் உற்சவம் நடந்தது. இன்று காலை, 10:00 மணிக்கு, ஜனனி ஹம்சினி குழுவினரின் கர்நாடக இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ