நாமக்கல் : ''தமிழகத்தில், 3 நிறுவனங்கள் உள்பட, துாய்மை பணியாளர்க-ளுக்கு உரிய சம்பளம் வழங்காத, 48 நிறுவனங்களின் ஒப்பந்தம் தடை செய்யப்பட்டுள்ளன,'' என, தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் பேசினார்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மனித கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களின் மறு-வாழ்வு சட்டம் அமலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா, எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் ஆகியோர் முன்-னிலை வகித்தனர். தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்து பேசியதாவது: துாய்மை பணியாளர்கள் நல ஆணையம் என்பது, துாய்மை பணி-யாளர்களின் குறைகளை கண்டறிந்து நிறைவேற்றுவது மட்டு-மல்ல, அவர்களது வாழ்வியலை உயர்த்துவதே இதன் முக்கிய-மான நோக்கமாக இருக்க வேண்டும் என, பிரதமர் மோடி தெரி-வித்துள்ளார். அதன்படி, துாய்மை பணியாளர்களுக்கான அடிப்-படை வசதி, ஊதியம் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, அவர்களது தேவைகளை நிறை-வேற்றி தரவேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆய்-விற்கு செல்லும் போது, துாய்மை பணியாளர்களின் குடியிருப்பு-களில் தங்கி ஆய்வு மேற்கொண்டு, பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்து, 100 சதவீதம் தீர்வு காண வேண்டும்.துாய்மை பணியாளர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, கட்டாயமாக மருத்துவ முகாம் நடத்த வேண்டும். மேலும், அவர்-களது குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழகம் முழுதும் ஒப்பந்த துாய்மை பணியாளர்க-ளுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை, தமிழக அரசுக்கு ஆணை-யத்தால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.தமிழகத்தில், மூன்று நிறுவனங்கள் உள்பட துாய்மை பணியாளர்-களுக்கு உரிய சம்பளம் வழங்காத, 48 ஒப்பந்த நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்த முறையில் துாய்மை பணியா-ளர்களை பணியில் ஈடுபடுத்தும் தனியார் நிறுவனங்கள், அவர்க-ளுக்கான வசதிகளை அளிக்க வேண்டும். இதில் விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.டி.ஆர்.ஓ., சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்-குனர் வடிவேல், அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் சாந்தா அருள்மொழி, நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.