உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காவிரி கரைபுரண்டோடியும் களையிழந்த ஆடிப்பெருக்கு

காவிரி கரைபுரண்டோடியும் களையிழந்த ஆடிப்பெருக்கு

நாமக்கல்:நாமக்கல் மாவட்ட காவிரிக்கரையோர பகுதிகளான, மோகனுார், ப.வேலுார், ஜேடர்பாளையம், பள்ளிப்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய தினம், கூட்டம் கூட்டமாக காவிரி ஆற்றுக்கு வரும் மக்கள், புதுமண தம்பதியர் ஆற்றில் புனித நீராடுவர். தற்போது மேட்டூர் அணை நிரம்பி, 1.10 லட்சம் கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால், ஆடிப்பெருக்கு தினமான நேற்று, காவிரி ஆற்றில் புனித நீராட, மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மோகனுார் உள்ளிட்ட காவிரி கரையோரங்களில், நேற்று புனித நீராட வந்த மக்கள், புதுமண தம்பதியர் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஆடிப்பெருக்கு விழாவும் களையிழந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ