உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாணவர்களுக்கு கையெழுத்து போட்டி

மாணவர்களுக்கு கையெழுத்து போட்டி

நாமக்கல்,நாமக்கல்லில் பள்ளி மாணவ, மாணவியருக்கான, மாவட்ட அளவிலான கையெழுத்து போட்டி நடந்தது.தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், பள்ளி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான தமிழ் கையெழுத்து போட்டி நடந்தது. அதில், 6, 7, 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ஒரு பிரிவாகவும், பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியர் என, இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து, 41 மாணவ, மாணவியர் எழுதினர். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ