உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஊதிய உத்தரவு பிறப்பிக்கும் அரசுத்துறை அதிகாரிக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

ஊதிய உத்தரவு பிறப்பிக்கும் அரசுத்துறை அதிகாரிக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

நாமக்கல்: மாவட்ட கருவூலம் மற்றும் கணக்குத்துறை, சேலம் மண்டல வரு-மானவரித்துறை சார்பில், அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கு-வதற்கான உத்தரவை பிறப்பிக்கும் அரசுத்துறை அதிகாரிகளுக்-கான விழிப்புணர்வு கருத்தரங்கு, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. டி.ஆர்.ஓ., சுமன் தலைமை வகித்தார். சேலம் வருமானவரித்துறை அலுவலர் கண-பதிசுந்தரம், நாமக்கல் மாவட்ட கருவூல அலுவலர் ஜெய்சங்கர், மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்-னிலை வகித்தனர்.மாநில கருவூலத்துறை ஆணையர் மற்றும் வருமான வரி ஆணையர் (டி.டி.எஸ்.,) இயாஸ் அகமது, கோவை கூடுதல் வரு-மான வரி ஆணையர் ஸ்ரீவிஜய் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் நடந்த இந்த விழிப்புணர்வு முகாமில், வருமான வரி பிடித்தம் தொடர்பான விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், டி.டி.எஸ்., திரும்ப பெற விண்ணப்பம் தாக்கல் செய்ய வேண்டிய தேதிகள், தவறும் பட்சத்தில் அதற்கான தாமத கட்-டணம், அபராத நடைமுறைகள், தனிப்பட்ட நபர்களின் வரு-மான வரி பிடித்தம் தொடர்பான விதிமுறைகள் பற்றியும் எடுத்து-ரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை