உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொல்லிமலை அருவிகளில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கொல்லிமலை அருவிகளில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

நாமக்கல்:ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம், இரண்டு நாட்கள் தடை விதித்துள்ளதால், கொல்லிமலைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் விடுமுறை நாட்களில், ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று, அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் குளித்து மகிழ்வர். தற்போது, ஆடிப்பெருக்கை முன்னிட்டு, வல்வில் ஓரி விழா, இரண்டு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்காக, மாவட்ட நிர்வாகம் சார்பில், இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.இதனால், வல்வில் ஓரி விழாவிற்கு சென்றுள்ள சுற்றுலா பயணிகள், அருவிகளில் குளித்து மகிழ்வதற்காக படையெடுத்துள்ளனர். ஆனால், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி ஆகிய இடங்களுக்கு, நேற்று, இன்று என, இரண்டு நாட்கள் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் செல்ல தற்காலி தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கொல்லிமலைக்கு சுற்றுலா சென்ற பயணிகள் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை