உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தொடர் மழையால் கரைந்த செங்கற்கள்

தொடர் மழையால் கரைந்த செங்கற்கள்

‍சேந்தமங்கலம், சேந்தமங்கலம், எருமப்பட்டி பகுதியில் பெய்த தொடர் மழையால், சூளையில் சுடுவதற்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான செங்கற்கள் தண்ணீரில் கரைந்த வீணாகின.நாமக்கல் மாவட்டத்தில், சேந்தமங்கலம், எருமப்பட்டி பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. கடந்த, மூன்று மாதமாக இப்பகுதியில் வெயில் கொளுத்தியதால், செங்கல் சூளைகளில் தினமும், 10 லட்சத்திற்கும் அதிகமான செங்கற்கள் தயார் செய்யப்பட்டு, கோவை, சேலம், கரூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், சேந்தமங்கலம், எருமப்பட்டி பகுதியில், கடந்த, 20 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், செங்கல் தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏராளமான செங்கல் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.இதுகுறித்து, செங்கல் தொழிலாளி முரளி கூறுகையில், ''வெளியூரில் இருந்து வந்து குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறோம். நாங்கள் செங்கற்களை வெட்டி, ஒரு வாரம் காய வைத்து கொடுக்க வேண்டும். கடந்த வாரம் முதல் ஒரு லட்சம் செங்கற்கள் தயார் செய்து வைத்திருந்த நிலையில், திடீரென பெய்த மழையால் கரைந்து வீணாகின. இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதித்து, வேலையிழந்து தவிக்கிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி