| ADDED : ஆக 17, 2024 02:25 AM
வெண்ணந்துார்:வெண்ணந்துார் யூனியனுக்குட்பட்ட அலவாய்ப்பட்டி பஞ்.,ல், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம், நேற்று நடந்தது. இதில் அலவாய்ப்பட்டி, ஓ.சவுதாபுரம், அக்கரைப்பட்டி, தொட்டியப்பட்டி, நடுப்பட்டி, பழந்தின்னிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள், தங்களது கோரிக்கை மனுக்களை துறை சார்ந்த அலுவலர்களிடம் கொடுத்தனர். ராசிபுரம் தாசில்தார் சரவணன், மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில், வெண்ணந்துார் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் துரைசாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் துரைசாமி, பி.டி.ஓ.,க்கள் வனிதா, மேனகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.